ஹிந்தி படத்தில் நடிப்பாரா தல அஜித்?

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பாலிவுட்டில் ஹிட் அடித்த “பிங்க்” படத்தின் ரீமேக்கான “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் உருவாகி வருகிறது. வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வேலை முடிவடைந்துள்ளன. இதனை தொடர்ந்து படத்தின் சில பணிகள் சில காட்சிகளை பார்த்து மகிழ்ச்சியடைந்த தயாரிப்பாளர் போனி கபூர் டுவிட்டர் பதிவில் “தன்னிடம் 3 இந்தி ஆக்‌ஷன் கதை தயாராக இருப்பதாகவும், அதில் ஒன்றிலாவது அஜித் நடிக்க ஒப்புக்கொள்வார்” என குறிப்பிட்டுள்ளார்.