Watchman Movie Review: வாட்ச்மேன் – திரை விமர்சனம்

Watchman Movie Review
Watchman Movie Review
Cast G.V.Prakash Kumar, Samyuktha Hegde, Yogi Babu
Direction AL Vijay
Production Double Meaning Productions
Music G. V. Prakash Kumar

இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் வாட்ச்மேன். இந்த படத்தின்  திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.

தான் லவ் பண்ணும் பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடித்த நிலையில், இளைஞர் ஒருவர் பேய் பங்களாவில் சிக்கி கொண்டு, அங்கு அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளே படத்தின் கதை.

படத்தின் நாயகன் (ஜீவி பிரகாஷ்) கடன் பெற்று அதை கட்ட முடியாத நிலையில், ஹீரோயின் (சம்யுக்த்தா ஹெக்டே) வை காதலிக்கிறார். இந்நிலையில், ஹீரோயினின் பெற்றோர், திடீரென நாயகன் வீட்டுக்கு வந்து நிச்சயதார்த்த தேதியை குறிக்கின்றனர். இது நடந்து  சில மணி நேரங்களில், ஹீரோ ஒரு பங்களாவுக்கு சென்று அங்கிருந்து பணத்தை திருடுகிறார். எதிர்பாரதாக விதமாக அங்கு இருக்கும் நாய் ஒன்று, ஹீரோ பணத்தை திருடி விட்டு செல்ல பெரியளவிலான தடையை ஏற்படுத்துகிறது. பின்னர், அந்த நாய் தனது எஜமானருக்கு உதவவே தன்னை தடுக்கிறது என்பது பின்னர் தெரிய வருகிறது. அந்த நாயின் எஜமானர் தீவிரவாதிகளால் தேடப்பட்டு வருவதும் ஹீரோவுக்கு தெரிகிறது.

Watchman Tamil Movie Review: வாட்ச்மேன் திரை விமர்சனம்

படத்தின் முதல் பாதியில் யோகி பாபு காமடி படத்தை தொய்வின்றி கொண்டு செல்கிறது.  பிளாஷ் பேக் காட்சிகள் படத்திற்கு தொய்வை ஏற்படுத்தினாலும் படம் போர் அடிக்காமலேயே செல்கிறது.

இந்த படத்தின் மூலம்  கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே தமிழில் அறிமுகமாகியுள்ளார். சமீப காலமாக முன்னணி காமடி நடிகராக இருந்து வரும் யோகி பாபு இந்த படத்தில் தனது காமடியில் கலக்கியுள்ளார். ரவி பிரகாஷ், சாமிநாதன் உளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த படத்தில் நடித்துள்ள நாய் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது.

படத்தின் பெரிய பலமே டெக்னிக்கல் பணிகள் தான். சினிமாட்டோகிராபி மற்றும் இசை படத்தின் ரசிக்க வைக்க உதவுகிறது.  நாயின் நடிப்பு படத்திற்கு மற்றொரு ஹைலைட்டாக விளங்குகிறது. படத்தில் இடம் பெற்றுள்ள ஆக்சன் காட்சிகள் டீசண்டாக உள்ளன. இருந்த போதும், பல இடங்களில் லாஜிக் ஓட்டை இடம் பெற்றுள்ளது தெளிவாக தெரிகிறது

Watchman Tamil Movie Review: வாட்ச்மேன் திரை விமர்சனம்

ரேட்டிங் 3/5