மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு நிறைவு

first phase polling concluded in 91 constituencies

மக்களவை தேர்தல் இம்முறை 7 கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி நேற்று சில மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் அதிக மக்கள் வாக்களிக்காமல் வாக்குப்பதிவு மந்த நிலையில் இருந்தது. சில வாக்குசாவடிகள் மதியத்திற்கு மேல் வெறிச்சோடின. நேற்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் குறித்து பார்ப்போம்.

வாக்குப்பதிவு நடைபெற்ற மாநிலங்கள்

பல மாநிலங்களில் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆந்திரபிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்த், மிசோரம், சிக்கிம், அந்தமான், தெலுங்கனா உட்பட பல மாநிலங்களில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதே போல் அசாம், சட்டிஸ்கர், ஜம்மு கஷ்மீர், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் சில தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்களித்த மக்களின் சதவீதம்

இயல்பு நிலையை விட இம்முறை வாக்குப்பதிவு குறைந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒரே கட்டமாக தேர்தல் நடந்த மாநிலங்களில் வாக்குப் பதிவான சதவீதம் குறித்து பார்ப்போம்.

உத்திரபிரதேசம் 64%
நாகாலாந்த் 68%
தெலுங்கானாவில் 60.9%
அசாமில் 65%
மேகாலயாவில் 66%

இதுவே நேற்று பதிவான வாக்கு சதவீதம். மக்கள் ஜனநாயக கடமையாற்ற தவறியிருப்பது வருத்தமளிக்கிறது.

வாக்குப்பதிவு மந்தம்

நாடு முழுவதும் நடைபெற்ற 91 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்த நிலையில் தான் இருந்தது. அதிக பட்சமாக நாகாலாந்தில் 68 சதவீதம் மட்டுமே பதிவாகியுள்ளது. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகள் எடுத்தும் சராசரியாக 35% மக்கள் வாக்களிக்காததன் மூலம் மக்கள் நாட்டின் மீது எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.

அடுத்த படியாக இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் எவ்வளவு சதவீதம் வாக்குகள் பதிவாகிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.