தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்

DMDK Leader Vijayakanth

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. அதிமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விஜயகாந்த் பிரசாரம் செய்ய மாட்டார் என கூறப்பட்டது. இந்நிலையில் விஜயகாந்த் இன்று பிரசாரம் செய்வார் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. அதன்படி அவர் மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை ஆகிய தொகுதிகளின் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று 4 மணிக்கு தனது பிரசாரத்தை தொடங்குகிறார். இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.