பாஜகவுக்கு ரஜினி ஆதரவு?

Is Rajinikanth supports bjp

மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது, ”அந்த தேர்தலில் நான் யாருக்கும் ஆதரவளிக்கவில்லை, குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் கட்சிகளுக்கு வாக்களியுங்கள்” என அண்மையில் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

கமலுக்கு ஆதரவா? ரஜினி விளக்கம்

யாருக்கும் ஆதரவு தெரிவிக்க போவதில்லை என்று சொன்ன ரஜினி எனக்கு ஆதரவளிப்பார் என கமல் நம்பிக்கை தெரிவித்தார். நான் சென்று கேட்காமல் அவராக ஆதரவு தெரிவிப்பது தான் எல்லோருக்கும் மரியாதை என கூறினார். இது குறித்து கருத்து தெரிவித்த ரஜினி “நான் ஏற்கனவே எனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டேன்” அதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தார். இதனை மீண்டும் மீண்டும் கேட்டு எங்கள் நட்பை கெடுத்துவிடாதீர்கள் எனவும் கூறியிருந்தார்.

பாஜக தேர்தல் அறிக்கை குறித்து ரஜினி என்ன சொன்னார்

தேர்தல் குறித்து பேசும் போது, பாஜக ஆட்சிக்கு வந்தால் நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தேர்தல் அறிக்கையை முதலில் நிறைவேற்ற வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். பாஜகவின் தேர்தல் அறிக்கையை வரவேற்க்கும் விதத்தில் பேசியுள்ளார். மேலும் நதிகளை இணைத்தால் நாட்டில் உள்ள மக்களின் பாதி வறுமை போய் விடும். நதிகள் இணைப்பு திட்டத்துக்கு பகீரத் என பெயர் வைக்குமாறு முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் கூறினேன். இது தேர்தல் நேரம் என்பதால் இதுகுறித்து மேலும் எதுவும் பேச வேண்டாம் என கூறி பேட்டியை முடித்து சென்றார்.