மறுதேர்தல் நடத்த வேண்டும், சந்திரபாபு நாயுடு கோரிக்கை!

chandrababu-naidu-request-re-election

ஆந்திர மாநிலத்தில் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது, அம்மாநிலத்தில் 30 சதவீதத்திற்கு மேலான வாக்குசாவடிகளில் மின்னனு வாக்கு இயந்திரம் செயல்பட வில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது, குண்டூர், விசாகப்பட்டினம் போன்ற முக்கிய நகரங்களிலும் வாக்கு பதிவு நடைபெறவில்லை. இதனால் ஆந்திராவில் மறு வாக்குபதிவு நடத்த வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார், அங்கு மக்களவை தேர்தல் உடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.