பிரதமா் மோடி, ராகுல் இன்று தமிழகம் வருகை

Narendra Modi and Rahul Gandhi visiting TN today

தோ்தல் பிரசாரத்திற்காக பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி ஆகிய இருவரும் இன்று தமிழகம் வருகிறார்கள்.

இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார் ராகுல்

இன்று தமிழகம் வரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கிருஷ்ணகிரி, தேனி, திருப்பரங்குன்றம், சேலம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். பாஜக அரசு செய்யத் தவறிய விஷயங்களை மேற்கோள் காட்டி தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

நீட் பிரச்சனை

தமிழகத்தில் நீட் தேர்விற்கு கடுமையான எதிர்ப்புகள் உள்ளது. அவர்களின் ஆதரவை பெரும் நோக்கில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு தேவை இல்லை எனக் கருதும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார். ஜி.எஸ்.டி அமலாக்கம் குறித்தும் விமர்சித்து பேசுகிறார். இந்த இரண்டு விஷயங்களை மையமாக வைத்தும், விவசாயிகளுக்கு 72000 ரூபாய் தரப்படும் என்ற வாக்குறுதியும் மக்கள் வரவேற்ப்பை பெற்றதாக அமைகிறது.

நாளை தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் மோடி

அதனை தொடர்ந்து பிரதமர் மோடி நாளை தேனி மற்றும் இராமநாதபுரம் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அவர் தேனியில் ஓபிஸ் மகன் ரவிந்திரநாத் குமாரை ஆதரித்து பேசுவது குறிப்பிடத்தக்கது. இராமநாதபுரத்தில் தூத்துக்குடி வேட்பாளர் தமிழிசை, சிவகங்கை வேட்பாளர் ஹச்.ராஜா மற்றும் ராமநாதபுரம் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

மக்கள் தீர்ப்பே இறுதியானது

ராகுலும், மோடியும் பல முறை பிரச்சாரம் செய்தாலும் மக்கள் யாரை தேர்வு செய்கிறார்கள் என்பது மே 23இல் தெரிய வரும். தாமரை மலருமா, கை ஓங்குமா என்பதே கிளைமாக்ஸ்.