தமிழகத்தில் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?

5.91 crore voters in tamilnadu

தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை குறித்த தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதன்படி தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் மொத்தம் 5,95,88,002 வாக்காளர்கள் உள்ளனர்.

பெண் வாக்காளர்கள்

2,98,60,765

ஆண் வாக்காளர்கள்

2,92,56,960

மூன்றாம் பாலினத்தவர்கள்

5,472 பேர்

அதிக வாக்காளர்களை கொண்ட மாவட்டங்களின் பட்டியலில் முதல் இடத்தில் சென்னையும், 2-வது இடத்தில் காஞ்சிபுரமும், 3-வது இடத்தில் திருவள்ளூரும் உள்ளது.

சென்னை மாவட்டத்தில் வாக்காளர் எண்ணிக்கை எவ்வளவு?

தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட மாவட்டமாக உள்ளது சென்னை. இதில் 3 மக்களவை தொகுதிகள் உள்ளடங்கும். சென்னை வாக்காளர்கள் குறித்த விபரம்

மொத்த வாக்காளர்கள் 38,18,999

ஆண்கள் 18,83,989
பெண்கள் 19,34,078
மூன்றாம் பாலினத்தவர் 932

காஞ்சிபுரம் மாவட்டம்

தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட மாவட்டங்களில் 2வது இடத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளது. வாக்காளர் எண்ணிக்கை குறித்த விபரம்

மொத்த வாக்காளர்கள் 36,90,997

ஆண்கள் 18,26,614
பெண்கள் 18,64,023
மூன்றாம் பாலினத்தவர் 360

திருவள்ளுர் மாவட்டம்

தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட மூன்றாவது மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டம் உள்ளது. வாக்காளர் எண்ணிக்கை குறித்த விபரம் இதோ

மொத்த வாக்காளர்கள் 32,34,706

ஆண்கள் 16,05,908
பெண்கள் 16,28,089
மூன்றாம் பாலினத்தவர் 709

அதிக வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாய் விளங்குகிறது. அங்கு 6லட்சத்து 18 ஆயிரத்து 695 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 3 லட்சத்து 11 ஆயிரத்து 102 பேர் ஆண்கள், 3 லட்சத்து 7 ஆயிரத்து 518 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 75 பேர்.

இளம் வாக்காளர்களை அதிகம் கொண்ட சட்டமன்ற தொகுதி

18 முதல் 19 வயது வரையிலான இளம் வாக்காளர்களை அதிகம் கொண்ட தொகுதி திருப்பரங்குன்றம். அங்கு 7,696 இளம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 4,189 பேர் ஆண்கள், 3,507 பேர் பெண்கள்.