அமைச்சர் உதயக்குமார் அறையில் வருமானவரித்துறை சோதனையில், ஆவணங்கள் சிக்கியதா?

I-T raid at MLA hostel

தமிழகத்தில் மக்களவை தேர்தலும், 18 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் வருகின்ற 18 ஆம் தேதி நடைபெறுகிறது. அதனால் நாளை மாலையுடன் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஆவணமில்லாமல் கொண்டு செல்லும் பணங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது.

கட்டுகட்டாக நோட்டுகள்

அண்மையில் வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டிலும், அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தினர். அப்போது கட்டுகட்டாக நோட்டுகள் சிக்கின. அந்த நிகழ்விற்கு பிறகு வருமான வரித்துறை சந்தேகத்திற்குறிய இடங்களிலும், புகார் தெரிவிக்கபட்ட இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறது.

சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் சோதனை

தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பணப்பட்டுவாடா நடைபெற அதிக வாய்ப்புள்ளதால் வருமானவரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் நேற்று இரவு 10.30 மணிக்கு சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. மேலும் அங்குள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் அறையிலும் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவணங்கள் சிக்கியதா?

வருமான வரித்துறை நடத்திய சோதனையில் பணமோ அல்லது ஆவணங்களோ கைப்பற்ற பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதே போன்று தான் 2017 ஆம் ஆண்டு ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போது அதே விடுதியில் அமைச்சர் விஜயபாஸ்கரின் அறையில் 101 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்வதற்கான ஆவணங்கள் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.