பட்டப்படிப்பை பூர்த்தி செய்யாத மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி!

Smriti Irani says she's not graduate

கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் வேட்புமனுவில், தான் பி.ஏ பயின்றுள்ளதாக ஸ்மிருதி இராணி குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலல் வேட்புமனுவில், பி.காம் படித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் இம்முறை தான் 12ஆம் வகுப்பு மட்டுமே பயின்றுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அவர் பிளஸ் டூ மட்டுமே படித்தவர். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அமேதியில் வேட்பு மனு தாக்கல் செய்த போது இந்த விஷயம் தெரியவந்துள்ளது. கல்வி தகுதியை வேட்புமனுவில் தவறாக குறிப்பிட்டால் வேட்பு மனு தாக்கல் நிராகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

12ஆம் வகுப்பு படித்தவர் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரா?

இந்நிலையில் அவரது உண்மையான கல்வித் தகுதி இன்று தான் தெரியவந்துள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பு வரை படித்த ஒருவரை மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக அமர்த்தியது ஏன் என சர்ச்சைகள் எழுந்தது. இதற்கு பதிலளித்த ஸ்மிருதி இராணி, கல்வியை பார்த்து தீர்மானிக்காதீர்கள், செயல்பாடுகளை வைத்து தீர்மானியுங்கள் என்றார். இதன்மூலம் அவர் இன்னும் பட்டப்படிப்பை முழுமையாக நிறைவு செய்யவில்லை என்று தெரிகிறது.