வருமான வரித்துறை சோதனைக்கு நாங்கள் பொறுப்பல்ல – ராஜ்நாத் சிங்

We are not responsible for IT Raid

தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகள் மக்களுக்கு பணத்தையும் பரிசு பொருள்களையும் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி விடக்கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் அறிவுரையின் படி காவல் துறை தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அதுமட்டுமின்றி பணப்பட்டுவாடா நடக்கிறது என புகார் வந்தால் நேரடியாக களத்திற்கு சென்று கைது நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.

வருமான வரித்துறை சோதனை

தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் முக்கிய அரசியல் கட்சியினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. அதிலும் சோதனை என்பது எதிர் கட்சியினர்களுடைய வீடுகளில் மட்டும் தான் நடைபெறுகிறது. இதனால் அனைத்து கட்சியினரும் இது ஆளும் கட்சியின் அராஜகம் என கூறிவருகின்றனர்.

தமிழகத்திலும் தொடரும் சோதனை

தமிழகத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் கடந்த வாரம் சோதனை நடந்தது. அதில் கட்டுகட்டாக கோடிக்கணக்கில் பணங்கள் சிக்கின. இதற்கு வேலூர் காவல் துறை வழக்குபதிவு செய்துள்ளது. இது குறித்து பேசிய முக ஸ்டாலின் நாங்கள் வெற்றி பெருவோம் என்று தெரிந்து எங்கள் மீது அவப்பெயரை ஏற்படுத்த இது போன்ற செயல்களில் பாஜக ஈடுபடுவதாக கூறினார்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

இது குறித்து விளக்கமளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வருமான வரித்துறை என்பது தன்னிச்சையாக செயல்படும் அமைப்பு என்றும், இந்த அமைப்புகளுக்கு தேர்தல் விதிமுறைகள் பொருந்தாது எனவும் குறிப்பிட்டார். ஆக வருமான வரித்துறைக்கும் அரசிற்கும் சம்பந்தம் கிடையாது என தெரிவித்தார்.